சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட மட்டத்திலான குழுக்களை அமைக்க தீர்மானம்

#SriLanka #Meeting #Fisherman #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #fishing boats
Thamilini
1 hour ago
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட மட்டத்திலான குழுக்களை அமைக்க தீர்மானம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பான சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்திலான குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, நீர்கொழும்பு , சிலாபம் , புத்தளம்  மற்றும் மன்னார்  உள்ளிட்ட 15 மீன்பிடி மாவட்டங்களில் இக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 

மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அந்தந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர் ஆகியோர் இக்குழுக்களின் இணைத் தலைவர்களாகச் செயற்படுவர்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 25 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. 

தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) அதிகாரிகள் மற்றும் தேவைக்கேற்ப பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளையும் இச்செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாணக் கடல் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் (மீன் வேட்டையாடலை) தடுப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதிலும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களை விபத்துகளிலிருந்து பாதுகாப்பதிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!