விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷால்
#Accident
#Actor
#TamilCinema
#Hospital
#LANKA4
#Movie
#L4
Prasu
2 hours ago
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் கோவாவில் நடைபெற்ற தனது புதிய திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'புருஷன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் கோவாவில் தீவிரமாக படமாக்கப்பட்டு வந்தன.
மிக முக்கியமான ஒரு சண்டைக்காட்சியில் டூப் எதுவும் இல்லாமல் சுயமாக நடித்தபோது, எதிர்பாராத விதமாக அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காயம் குணமடைய குறைந்தது 3 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.