நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: இரண்டு மனுக்கள் நிராகரிப்பு

#SriLanka #LANKA4 #Court #Allegation #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
15 hours ago
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: இரண்டு மனுக்கள் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்களை இலங்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்துள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் முன்னர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக்கடதாசி தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!