கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் ரூ.30 இலட்சம் செலவில் புல் வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்

#SriLanka #Kilinochchi #Project #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
15 hours ago
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் ரூ.30 இலட்சம் செலவில் புல் வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில், கால்நடைகளுக்குத் தேவையான தரமான தீவனப் புல்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

‘சமூக சக்தி’ வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.30 இலட்சம் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஊற்றுப்புலம் சமூக சக்தியின் தவிசாளர் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் மருங்கன் மோகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் 15 பயனாளிகளை இணைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான தரமான தீவனப் புல்களை தொடர்ச்சியாக வழங்குவதுடன், திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்பை உருவாக்குவதும் பிரதான நோக்கமாகும்.

மேலும், உற்பத்தி செய்யப்படும் புற்களை நவீன முறையில் பதப்படுத்தி பொதிகளாகத் தயாரித்து சேமிப்பதன் மூலம், ஆண்டு முழுவதும் கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தேவையான தீவனத்தை வழங்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக சக்தி உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!