சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு அரச மன்னிப்பு கோரி 6 தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரிக்கை

#SriLanka #LANKA4 #SaudiArabia #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #SivarasaAnojan
Abi
13 hours ago
சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு அரச மன்னிப்பு கோரி 6 தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை சவூதி அரேபிய அரசாங்கத்திடம் அவசர மனிதாபிமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. 

அனோஜனுக்கு முன்னர் ஐந்து வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிரான மேன்முறையீட்டு நடவடிக்கைகளின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மேல்முறையீடு செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனோஜனின் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதால், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினம் எனவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த வழக்கின் உண்மை நிலை, இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள், அத்துடன் அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் முன்னிலையிலும் தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை பின்னர் நீக்கி, அதற்காக மன்னிப்பும் கோரியதாக பேரவை தெரிவித்துள்ளது. 

இலங்கை–சவூதி அரேபியா இடையிலான நீண்டகால நல்லுறவைச் சுட்டிக்காட்டியுள்ள பேரவை, மனிதாபிமான அடிப்படையில் அனோஜனின் நிலைமையை பரிசீலித்து, அவருக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தக் கோரிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சு, கொழும்பிலுள்ள சவூதி தூதரகம் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு: அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன; வழக்கின் இறுதி சட்ட நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!