பழுகாமம் சூட்டிங் ஸ்டார் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்றது
பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சூட்டிங் ஸ்டார் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வீரர்களை உள்ளடக்கிய இந்தத் தொடரின் போட்டிகள் அண்மையில் சிறப்பாக நடைபெற்றன. கிராம மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதுடன், இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணருதல், அவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சிறந்த விளையாட்டுப் பண்பை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர், வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ வி. மதிமேனன் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இளம் வீரர்களுடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது தலைமுறைகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
போட்டிகளில் வீரர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றதுடன், கழக நிர்வாகிகள், சிரேஷ்ட உறுப்பினர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
கிராம மட்ட விளையாட்டு மைதானங்கள் இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய தளங்களாக அமைகின்றன.
அந்த வகையில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்து வரும் இத்தகைய விளையாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.