ஒக்டோபர் முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘Demerit Points’ முறை – ஆறு மாத முன்னோடித் திட்டம்
#SriLanka
#Project
#LANKA4
#Traffic
#Pilot
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
12 hours ago
போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆறு மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தகவலின்படி, குறித்த முன்னோடித் திட்டம் 2026 ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டு, 2027 மார்ச் 31ஆம் திகதி வரை ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.