மடம்பே பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி
#SriLanka
#Death
#Accident
#Hospital
#Road
#LANKA4
#L4
Prasu
3 hours ago
மடம்பே - குளியாப்பிட்டிய வீதியில் உள்ள ஹலபந்தரகம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தாயார் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் டும்மலசூரியவைச் சேர்ந்த வீரகொடியன பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த தாயார் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று மின் கம்பம் ஒன்றின் மீது மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.