பத்தேகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழப்பு
#SriLanka
#Police
#Crime
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பத்தேகமவின் ஹல்பாத்தோட்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்தவர்களால், முச்சக்கர வண்டியில் சென்ற குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
இதில் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.
தற்போது குறித்த பெண்ணும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், பத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.