டித்வா சூறாவளியால் இடைநிறுத்தப்பட்ட மலையகத்திற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்
'டிட்வா' (Ditwah) சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலைநாட்டு ரயில் பாதையின் சில பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீளவும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அக்டோபர் 2-ஆம் திகதிமுதல் ரயில் சேவைகள் மீளவும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக் கனவுக்கும் கம்பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் 103 இடங்களில் சூறாவளியால் பாதிப்பு ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாதிப்புகளில் 36 இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், 67 இடங்களில் மண் சரிவு மற்றும் ரயில் பாதை அடித்துச் செல்லப்படதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிணங்க, சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டைக்கும் பேராதனைக்கும் இடையிலும், பேராதனைக்கும் கம்பளைக்கும் இடையிலும் ரயில்கள் இயக்கப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.