சஹ்ரானின் குழுவுக்கு புதிய தலைவர் தெரிவு - முடிவுக்கட்ட பாட்டாலி சம்பிக்க ரணவக்க அழைப்பு

#SriLanka #Kalmunai #Champika Ranawaka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
சஹ்ரானின் குழுவுக்கு புதிய தலைவர் தெரிவு - முடிவுக்கட்ட பாட்டாலி சம்பிக்க ரணவக்க அழைப்பு

உயிரித்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான  சஹ்ரான் ஹாசிமின் குழுவுக்கு  சியான் எனும் புதிய தலைவர் கல்முனையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தற்போது சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள  09 பேரில் ஒருசிலர்  இந்த தலைவரின் கீழ் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

அரசாங்கம் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது. ஆரம்பத்திலேயே இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இதனை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார். 

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் இன்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் நடைமுறையில் செயற்படுகிறது. பயங்கரவாதி சஹ்ரானின் குழுவுக்கு அண்மையில் கல்முனை பகுதியில் சியான் எனும் நபர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் அண்மையில் விடுதலையான 09 பேரில் ஒருசிலர் சஹ்ரானின் புதிய குழுவில் இணைந்துள்ளார்கள்.இதுகுறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். 

 இந்த நாட்டில் தமிழ் அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்கள அடிப்படைவாதம் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆரம்பத்திலேயே முடிவுக்கட்ட வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!