மூன்று டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை நன்கொடையாக வழங்கியது இந்தியா
#SriLanka
#Medicine
#donate
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
இலங்கைக்கு இந்தியா மூன்று டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் இந்த மருந்துத் தொகுப்பு நேற்று (28) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.