ஈரான் போரில் அமெரிக்கா விரைவில் வெற்றிப்பெறும் - ட்ரம்ப் அறிவிப்பு
#SriLanka
#War
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
1 hour ago
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இந்தப் போரில் அமெரிக்கா "மிக விரைவில்" வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நாங்கள் வெற்றி பெறப் போகிறோம்; என்னைப் பொறுத்தவரை, முடிவு எப்படியாவது ஒரு விதத்தில் அமையும்," என்று ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் கூறினார்.
"இது மிக விரைவாகவே நடக்கப்போகிறது."
இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு எரிபொருள் விலைகள் பெருமளவு குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.