கோப்பாய் வடக்கு – மத்தி விவசாயிகளுக்கு பெறுமதியான விவசாய உபகரணங்கள்!

#SriLanka #LANKA4 #famers #North #Agriculture #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கோப்பாய் வடக்கு – மத்தி விவசாயிகளுக்கு பெறுமதியான விவசாய உபகரணங்கள்!

யாழ்ப்பாணம், கோப்பாய் — கோப்பாய் வடக்கு மற்றும் மத்தி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் ஒதுக்கீட்டில் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், உயர் அழுத்த விசைத் தெளிப்பான் மற்றும் நீர்மூழ்கி நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள், கோப்பாய் வடக்கு–மத்தி விவசாய சம்மேளனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் இந்நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களின் பயன்பாட்டை நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக அமைக்கப்படவுள்ள விவசாய வீதியும் பார்வையிடப்பட்டது.

குறித்த வீதியை சமூக சக்தி வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கி, அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தேவைகளை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுபகரணங்கள், கோப்பாய் வடக்கு மற்றும் மத்தி பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!