அதிகாலை கோர விபத்து – ஒருவர் பலி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!
ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை சுமார் 3.30 மணியளவில், நால்வர் பயணித்த கார், சாரதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இறக்கக்கண்டி–நாளாம் வட்டாரம், வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் 25 வயதான மனைவி, 5 வயது மகன் மற்றும் 19 வயதான சகோதரர் ஆகியோர் காயமடைந்த நிலையில் முதலில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.