ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
#SriLanka
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#Asian_Games
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#gold medals
Abi
2 hours ago
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது X தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேஷ் தரங்க வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து இலங்கையர்கள் சார்பிலும், விளையாட்டுத் துறையின் உயரிய இலக்காகக் கருதப்படும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான ருமேஷ் தரங்கவின் எதிர்காலப் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவில் இலங்கையின் தடகளத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி, நாட்டின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.