கல்மடுக்குளத்தின் கீழ் 2026-2027 காலபோக நெற்செய்கை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

#SriLanka #LANKA4 #Paddy #Tank #discussion #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY
Abi
2 hours ago
கல்மடுக்குளத்தின் கீழ் 2026-2027 காலபோக நெற்செய்கை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக்குளத்தின் கீழான 2026-2027 காலபோக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (29.09.2026) கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்வுகூறப்பட்டுள்ள எல்நினோ (El Niño) நிலைமையை கருத்திற்கொண்டு காலபோக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், சேற்றடித்தல் மேற்கொள்ளாமல் நேரடியாக விதைப்பு செய்வதால் களைநெல்லின் தாக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்பதால், களைநெல்லை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எதிர்வரும் காலபோக நெற்செய்கையின்போது விவசாயிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், நீர்விநியோகம், பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பான பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் கே. பிரகாஷ், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பிரிவு பொறியியலாளர் கே. சுஜீவன், நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், கமநல காப்புறுதிச் சபை அதிகாரிகள் உள்ளிட்ட விவசாயத்துறை சார்ந்த மாவட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், கல்மடுக்குளத்தின் கீழ் இயங்கும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களது கருத்துகள் மற்றும் தேவைகளை முன்வைத்தனர்.

எதிர்வரும் காலபோகத்தில் நீர் வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி, விவசாயிகளின் உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!