பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த அதிவேக இணையத் திட்டம்!
நாடு முழுவதும் உள்ள 3,700 பாடசாலைகளை இலக்காகக் கொண்டு அதிவேக Fiber இணையத்தள வசதிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,200 பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள இணைப்பு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 1,564 பாடசாலைகளுக்கும் துரிதமாக அதிவேக இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கல்வி வளங்களை இலகுவாக அணுகுவதற்கு இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாடசாலைகளின் இணையத்தள உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.