22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – லால் விஜேநாயக்க

#SriLanka #LANKA4 #President #Changes #Amendment #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – லால் விஜேநாயக்க

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுடன் முரண்பட்ட கருத்தைத் தாம் கொண்டிருந்தபோதிலும், கட்சி தம்மை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை என்றும், தாமும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாகவும் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடும் தனது நிலைப்பாடும் முரண்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தம்மை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!