CPC-யின் புதிய எண்ணெய் சேமிப்பு கட்டமைப்பு பணிகள் ஆரம்பம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) Jet A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் CPC மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு (CPSTL) உரித்தான இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது, வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணுவதுடன், மக்களுக்கு திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், குறித்த பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.