ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா

#India #Pakistan #LANKA4 #Cricket #Gold #Asian_Games #L4
Prasu
3 hours ago
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் , ஆண்கள் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா 61 ஓட்டங்களுக்கு திலக் வர்மா 51 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

பாகிஸ்தான் சார்பில், ஹசன் நவாஸ் 96 ஓட்டங்களும் சைம் அயூப் 29 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், 2026ம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கமும் பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கமும் இலங்கை அணி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!