அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலாவது வரிச்சலுகை வழங்க வேண்டும் - சஜித் கோரிக்கை
#SriLanka
#Sajith Premadasa
#Tax
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலாவது அரசாங்கம் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதே நாணய நிதியம் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக வரி அறவிடப்பட்டுள்ளதால், அரச வருமானம் இலக்குகளையும் தாண்டிச் சென்றுள்ளன. எனவே அடுத்த வருடத்திலாவது வரிச் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.