கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

#SriLanka #ARREST #CourtOrder #LANKA4 #Monk #L4 #Buddhist
Prasu
1 hour ago
கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய கலாகொட அத்தே ஞானசார தேரர், இலங்கையின் களுத்துறைப் பகுதியில் உள்ள தினியாவல ஆரண்ய சேனாசனயவில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் 'பொது பல சேனா' அமைப்பின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் செல்லுபடியற்றதாக்கியதைத் தொடர்ந்து இந்தக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!