ஈரானிய கப்பல்களால் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் பிரச்சினை ஏற்படலாம் - தூதர்களை அழைக்குமாறு வலியுறுத்தல்

#SriLanka #Iran #Ambassador #Ship #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஈரானிய கப்பல்களால் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் பிரச்சினை ஏற்படலாம் - தூதர்களை அழைக்குமாறு வலியுறுத்தல்

இலங்கைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கப்பலால் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம் என இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இப்னம் கஃபூர் தெரிவித்துள்ளார். 

எனவே இலங்கை அரசாங்கம் ஈரான் மற்றும் அமெரிக்காவின் தூதுவர்களை அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலளார் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஒருவேளை இலங்கை அரசாங்கம் இந்த ஈரானியக் கப்பல்களுக்கு உதவிகளை வழங்கினால், அமெரிக்கா இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால் எமக்குக் கூடுதல் டொலர் கையிருப்பு தேவையாக உள்ளது. 

இத்தகைய சூழலில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, எமது அரசாங்கமானது காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்த நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அதேநேரம் இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த 19 கப்பல்களிலும் கப்பலுக்கு 25 முதல் 30 ஊழியர்கள் வீதம் நூற்றுக்கணக்கான கப்பல் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தோ அல்லது மனிதநேயப் பிரச்சினைகளோ ஏற்படும் போது இலங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பொறுத்தமான செயலாக இருக்காதுஎன்றும் அவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!