கொஸ்கொடவில் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
#SriLanka
#Police
#Investigation
#Crime
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கொஸ்கொடவின் மகாஹிந்துரவ பகுதியில் இரு சந்தேகநபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து இரு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
லோக்கு பட்டி தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், கரந்தெனிய சுத்தா தரப்பைச் சேர்ந்த ஒருவரை கொலைசெய்ய முயன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் பிடிபட்ட சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முயன்றபோதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வலன ஊழல் தடுப்புப் பிரிவால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.