அஹுங்கல்லவில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச்சூடு - வயோதிபர் படுகாயம்
#SriLanka
#Investigation
#Crime
#GunShoot
#Injury
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
அஹுங்கல்ல காவல் பிரிவுக்கு உட்பட்ட கல்வேஹெரா பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 74 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது சிகிச்சைக்காக பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஜன்னல் வழியாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.