உக்ரைனில் இந்தியருக்குச் சொந்தமான மருந்து தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல் - ஒருவர் மரணம்

#Death #Attack #Russia #Ukraine #LANKA4 #Medicine #Factory #Indian #L4
Prasu
6 hours ago
உக்ரைனில் இந்தியருக்குச் சொந்தமான மருந்து தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல் - ஒருவர் மரணம்

உக்ரைனில் உள்ள இந்தியாவின் 'குசும்' (Kusum) குழுமத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய மருந்துத் தொழிற்சாலை ரஷ்ய ட்ரோன்களால் தாக்கப்பட்டதில் அழிந்துள்ளது.

இந்த தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். உக்ரைனின் சுமி (Sumy) பகுதியில் அமைந்துள்ள இந்த மருந்துத் தொழிற்சாலையின் முக்கியக் கட்டடம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. 

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

'குசும்' குழுமம் 1994ல் இந்திய மருந்துகளை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் விநியோக நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. தற்போது இது இந்தியரான ராஜீவ் குப்தாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இக்குழுமம் 50க்கும் மேற்பட்ட (பெரும்பாலும் ஜெனரிக்) மருந்துகளைத் தயாரித்து, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த "ரஷ்யத் தாக்குதலை" கண்டித்ததுடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!