பேராதனை–கொழும்பு கடுகதி ரயில் தடம்புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

#SriLanka #Colombo #Country #LANKA4 #Train #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
16 hours ago
பேராதனை–கொழும்பு கடுகதி ரயில் தடம்புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், இன்று (5) அதிகாலை 4.40 மணியளவில் கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.

ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன.

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்ததால், அதனை ரயில் சாரதி அவதானிக்கும் போது சுமார் 10 மீற்றர் தூரமே இருந்ததாகவும், மண் திட்டில் மோதியதில் ரயில் தூக்கி வீசப்பட்டு பின்னர் பாறையொன்றில் மோதியதாகவும் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!