2027 க.பொ.த. சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு
#SriLanka
#exam
#LANKA4
#Candidate
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
16 hours ago
2027ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, பரீட்சைக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
15 வயதை எட்டிய அல்லது எட்டவுள்ள இலங்கைப் பிரஜைகள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை அதிபர் அல்லது பிரிவெனாதிபதி உறுதிப்படுத்தி சமர்ப்பிக்க முடியும்.
மாணவர்கள் தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பதுடன், விண்ணப்பத்தில் பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பரீட்சைக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை கிடைப்பதை உறுதி செய்வதற்காக விண்ணப்ப நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.