தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைக்க முடியாது – செந்தில் தொண்டமான்

#SriLanka #LANKA4 #Workers #SenthilThondaman #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
12 hours ago
தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைக்க முடியாது – செந்தில் தொண்டமான்

லவர்ஸ்லீப் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைத்த சம்பவத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்களுக்காக வழங்கப்பட்ட காணியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போதே இவ்வாறு அவமதிக்கும் வகையில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இந்நாட்டின் பிரஜைகள் என தெரிவித்த செந்தில் தொண்டமான், அவர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக தோட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக பீற்று தோட்ட முகாமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட செந்தில் தொண்டமான், உரிய நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!