2026–2029 இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள்: ADB உடன் விசேட கலந்துரையாடல்
#SriLanka
#Development
#discussion
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
12 hours ago
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 2026–2029 காலப்பகுதிக்கான இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ADB இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டுக்கான ADB வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஒக்டோபர் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ADBயின் நீண்டகால திட்ட வரைபுக்குள் இணைக்கப்பட வேண்டிய முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காண்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.