போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

#SriLanka #ARREST #LANKA4 #municipal council #Traffic
Abi
15 hours ago
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையின்போது சந்தேகநபர்களிடமிருந்து ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மஹிந்த கஹந்தகம நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றுமொரு நபரும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!