டீசல் சந்தையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு 82 வீதமாக ஆக அதிகரிப்பு

#SriLanka #LANKA4 #corruption #Market
Abi
13 hours ago
டீசல் சந்தையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு 82 வீதமாக ஆக அதிகரிப்பு

இலங்கையின் டீசல் சந்தையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு தற்போது 82 சதவீதமாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் உரிய நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலதிக பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, முன்னர் டீசல் சந்தையில் சுமார் 54 சதவீதமாக இருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு தற்போது 82 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!