ஆசிரியர் சேவையை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதில் ஆசிரியர் சமூகம் ஆற்றிவரும் மகத்தான சேவைக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தொழில் என்பது வெறுமனே ஊதியம் பெறுவதற்கான பணியாக அல்லாது, அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த மகத்தான சேவையாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை முறையான நடைமுறையின் கீழ் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் புதியதொரு சமூக உரையாடலை ஆரம்பிக்க முன்வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனவும், அவர்களின் சேவையை மதித்து கல்வித் துறையில் தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.