இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்
#SriLanka
#weather
#Rain
#Meteorology
Thamilini
2 hours ago
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும், ஊவா மாகாணம் மற்றும் அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.