அணுவாயுத குறைப்பே ஒரே வழி - ஏழு மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஜே.டி. வான்ஸ் யோசனை!
பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரான் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்து வொஷிங்டனுக்கு உறுதியாகத் தெரியாத நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் தனது அணு ஆயுத செறிவூட்டும் திறனில் குறிப்பிடத்தக்க குறைப்பைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், "உங்களுக்கு அணு ஆயுதம் வேண்டாம் என்றால், உங்களுக்கு 60% செறிவூட்டப்பட்ட எரிபொருள் ஏன் தேவை?
அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உங்கள் உறுதிப்பாட்டைக் காட்ட விரும்பினால், அதிக செறிவூட்டப்பட்ட எரிபொருளை உற்பத்தி செய்யாதீர்கள். இது ஒரு அடிப்படையான தொடக்கப் பிரச்சினை," என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டைக் காட்ட விரும்பினால், தங்கள் செறிவூட்டும் திறனில் அர்த்தமுள்ள ஒன்றைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் எனவும் அவர் மேலும் கூறினார்.