ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமை தொடர்பில் சஜித் கவலை - கண்ணியத்திற்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தல்

#SriLanka #Sajith Premadasa #Gnanasara Thero #Dress
Thamilini
2 hours ago
ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமை தொடர்பில் சஜித் கவலை - கண்ணியத்திற்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தல்

கலகொட அத்தே ஞானசார தேரரின் பௌத்த உடை கலைக்கப்பட்டு சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.

மத மரபுகள் மற்றும் பௌத்த துறவிக்குரிய ஆடையின் (காவி உடை) கண்ணியம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில்ட அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றங்கள் சட்டக் கட்டமைப்பிற்கு உட்பட்டே செயல்படுகின்றன என்றும் அந்த வரம்புகளை மீற முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளையில் சமூக மரபுகள், நடைமுறைகள் மற்றும் கலாச்சார அடையாளங்கள் குறித்தும் அரசாங்கங்கள் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பேணுவதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொருத்தமான சாதாரண உடையில் ஆஜராக அனுமதிக்கப்பட்டாலும், ஒரு பௌத்த துறவியையோ அல்லது வேறு மதத் தலைவரையோ அவர்களின் சம்மதமின்றியோ அல்லது அவர்கள் சார்ந்த மத நிறுவனத்தின் அறிவித்தல் இன்றியோ சாதாரண உடையில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது முறையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஒருவரின் பௌத்த துறவி அந்தஸ்து அல்லது வேறு மதத்தில் அவருக்குள்ள அதிகாரப்பூர்வ நிலை தொடர்பான முடிவுகள் அந்தந்த மத நிறுவனங்களாலேயே எடுக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்கள், மூன்று பௌத்த பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களின் அல்லது பிற மதங்கள் சார்ந்த விவகாரங்களில் அந்தந்த மதத் தலைமைகளின் அறிதல் மற்றும் ஒப்புதலுடன் கையாளப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!