நாட்டின் ஒரு சில பகுதிகளில் 45°C உச்சபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு - மக்களின் கவனத்திற்கு!

#SriLanka #weather #Warning #heat
Thamilini
2 hours ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில்  45°C உச்சபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு - மக்களின் கவனத்திற்கு!

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்பநிலை குறித்து அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இதன்படி இன்றைய தினம் வெப்பச் சுட்டெண் (heat index) 'எச்சரிக்கை நிலையை' எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் வட-மேற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.

இப்பகுதிகளில் வெப்பநிலையானது 39°C முதல் 45°C வரை எட்டக்ககூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளில் வசிப்பவர்கள், உடலில் உணரப்படும் அதிகரித்து வரும் வெப்பத்திற்கு எதிராகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!