1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களுடன் போலி மருத்துவர்கள் இருவர் கைது

#SriLanka #ARREST #doctor #Medicine #Fraud
Thamilini
1 hour ago
1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களுடன் போலி மருத்துவர்கள் இருவர் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மருத்துவர்கள் போலச் செயல்பட்டதாகக் கூறப்படும் இருவர், பெருமளவிலான மருந்துப் பொருட்களுடன் ' கைது செய்யப்பட்டுள்ளனர். 

'வலன மத்திய குற்றத் தடுப்பு அதிரடிப் படை' இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சோதனைகளை தொடர்ந்து மீகலேவாவில் (Meegalewa)   இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் மீகலேவா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குருநாகல் மாவட்ட மருந்து ஆய்வாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலேவா பொலிஸார் ஆகியோர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!