முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது

#SriLanka #ARREST #Investigation #Shiranthi Rajapaksa
Thamilini
2 hours ago
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கிருலப்பனை, பூர்வராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். 

 அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னரே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

'சிறிலியா சவிய' (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றின் ஊடாக இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!