‘சிறிலியா சவிய’ விசாரணை தீவிரம்: பிரதீப் காரியவசம் கைது

#SriLanka #ARREST #Investigation #Bank #LANKA4 #Allegation
Abi
1 hour ago
‘சிறிலியா சவிய’ விசாரணை தீவிரம்: பிரதீப் காரியவசம் கைது

தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான சிரந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘சிறிலியா சவிய’ அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலியா சவிய அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபா நிதி பரிவர்த்தனை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த நிதி சிறுவர் வைத்தியசாலைக்கான ஸ்கேனர் கொள்வனவுடன் தொடர்புடையதாக விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதீப் காரியவசத்திடம் முன்னதாகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

இதேவேளை, சிறிலியா சவிய அமைப்புடன் தொடர்புடைய விசாரணைக்காக சிரந்தி ராஜபக்ஷவிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், இந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!