தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

#SriLanka #government #Fuel #LANKA4 #Private
Abi
2 hours ago
தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், பெட்ரோலியச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க CPC தனது சந்தைப் பங்கை 50–55 சதவீதத்திலிருந்து 77–80 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் போதுமான எரிபொருள் கையிருப்பை பேண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!