குறுமண்வெளியில் கோலாகலமாக நடைபெற்ற முத்தையா லீலாவதி ஞாபகார்த்தக் கிண்ண இறுதிப்போட்டி
குறுமண்வெளி, 29 செப்டெம்பர் 2026: குறுமண்வெளி ரொபின் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தையா லீலாவதி ஞாபகார்த்தக் கிண்ண இறுதிப்போட்டி – 2026 நிகழ்வு, கழகத் தலைவர் திரு. கோ. தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டேன்.
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ மே. வினோஜராஜ், உப தவிசாளர் கௌரவ அ. வசீகரன், பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ அ. பத்தமதேவு, கௌரவ சு. இளமாறன் உள்ளிட்ட பலரும், மறைந்த முத்தையா லீலாவதி அவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த முத்தையா லீலாவதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டு நிகழ்வு, கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களிடையே ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் சிறந்த தளமாகவும் அமைந்திருந்தது.
இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதிலும், நேர்மறையான சமூகச் செயற்பாடுகளுடன் அவர்களை இணைப்பதிலும் இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து முன்னெடுத்த குறுமண்வெளி ரொபின் விளையாட்டுக் கழகத்தினர், விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், ஆதரவாளர்கள், மறைந்த முத்தையா லீலாவதி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
“எமது இளைஞர்களின் திறமைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்; விளையாட்டின் ஊடாக ஒற்றுமையானதும் பொறுப்புணர்வுள்ளதுமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.