ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

#SriLanka #Minister #LANKA4 #leader #SenthilThondaman #Harshana Nanayakkara
Abi
3 hours ago
ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு தோட்ட நிர்வாகங்களினால் வழங்கப்படும் வெளியேற்ற அறிவிப்புகள் (Eviction Notices) தொடர்பில் செந்தில் தொண்டமான் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பல ஆண்டுகளாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் சிவில் நடைமுறைச் சட்டத்தின் 66ஆம் பிரிவை சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், குடியிருப்பு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளில் பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், கடந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் குடியிருப்பதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு எழுத்துமூல ஆவணங்கள் இல்லாவிட்டாலும், அங்கு நீண்டகாலமாக வசித்து வருவதை உறுதிப்படுத்தும் மின்சாரப் பட்டியல்கள், வாக்காளர் பட்டியல் பதிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களையும், தற்காலிக குடியிருப்புகள் மற்றும் கூடாரங்களில் வாழும் மக்களையும், தற்போது தோட்டத் துறையில் பணியாற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவது நியாயமற்றது எனவும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, பெருந்தோட்ட மக்களின் நீண்டகால குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!