வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற ஹென்றி பி. காகன் மற்றும் கென்சோ சோவாய்
#LANKA4
#Nobel
#Award
#Scientist
#World
#2026
#L4
Prasu
4 hours ago
பிரான்ஸ் விஞ்ஞானி ஹென்றி பி.காகன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி கென்சோ சோய் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில், நேரியல் அல்லாத விளைவுகள் மற்றும் தன்வினையூக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக, ஹென்றி பி.காகன் மற்றும் கென்சோ சோய் ஆகியோருக்கு வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபலின் உயிலின்படி நிறுவப்பட்ட இப்பரிசுகள், அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன; உலகப் போர்கள் காரணமாகச் சில காலங்களில் மட்டும் இவை வழங்கப்படாமல் இருந்தன.