இவ்வாண்டில் வாகன விபத்துகளால் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு – பொலிஸார் தகவல்!
#SriLanka
#Police
#Accident
#LANKA4
#report
#Killed
#vehicle
Riya
15 hours ago
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 6ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1988 விபத்துக்களில் 2095 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகியுள்ளன.
மது போதையில் வாகனம் செலுத்துவதால் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.