எல்நினோ நிகழ்வு டிசம்பரில் உச்சத்தை அடையும்! அடுத்த வருடம் வரை நீடிக்கும்!!

#SriLanka #Warning #ElNINO #WMO
Thamilini
2 hours ago
எல்நினோ நிகழ்வு டிசம்பரில் உச்சத்தை அடையும்! அடுத்த வருடம் வரை நீடிக்கும்!!

இந்த ஆண்டு நிலவும் 'எல் நினோ' (El Niño) நிகழ்வு டிசம்பரில் உச்சத்தை அடைவதற்கு முன் மேலும் தீவிரமடையும் என்றும், பிப்ரவரி 2027 வரை நீடிக்க கிட்டத்தட்ட 100 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) அறிவித்துள்ளது. 

நேற்று வெளியிட்ட தனது மாதாந்திர பருவநிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

குறித்த அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இக்காலகட்டத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"எல் நினோ நிகழ்வானது பிப்ரவரி 2027 வரை நீடிக்க கிட்டத்தட்ட 100% வாய்ப்புள்ளது என்றும், இது குறைந்தது 1950-க்குப் பிறகு ஏற்பட்ட மிகத் தீவிரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. 

இதற்கிடையே எல் நினோ நிகழ்வின் மையப்பகுதியாகத் திகழும் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இயல்பை விட 3.7 டிகிரி செல்சியஸ் (6.7 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்து சாதனை அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கணிக்கப்பட்டுள்ள இந்த வெப்பநிலை மாறுபாடானது, நவம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரையிலான காலத்தில் பதிவான முந்தைய சாதனையான 2.6 டிகிரி செல்சியஸை விட கணிசமாக அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!