ஹவுதி தாக்குதல் களத்தில் இறங்கிய பாகிஸ்தான் படைகள்
#world_news
#Attack
#Pakistan
#LANKA4
#Troops
#Houthi
Riya
3 hours ago
சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் தனது படையை சவுதியில் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக தங்கள் படைகள் சவுதி அரேபியாவில் நிலை கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் புதிய மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட இந்த மூன்று நாடுகளில் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தாலும் அது மற்ற இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் மூன்று நாடுகளின் ராணுவமும் இணைந்து செயல்படும்.