தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ!
#SriLanka
#Hospital
#Eye
#Shiranthi Rajapaksa
Thamilini
2 hours ago
சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக இன்று (09) தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, அவர் நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய கண் மருத்துவமனையில் உள்ள நிபுணர் ஒருவரைக் கொண்டு அவரைப் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.