ரூ.120 மில்லியன் பெறுமதியான இரண்டு நவீன லெபரோஸ்கோபி இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு நன்கொடை!

#SriLanka #Health #Hospital #Development #LANKA4 #Ministry
Riya
1 hour ago
ரூ.120 மில்லியன் பெறுமதியான இரண்டு நவீன லெபரோஸ்கோபி இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு நன்கொடை!

சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நவீன லெபரோஸ்கோபிசத்திரசிகிச்சை உபகரணங்கள், சுகாதார அமைச்சிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.

இலங்கையின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூரில் வசிக்கும் நாகுலுகமுவே சுமன தேரர் மற்றும் கடவத்த சரண பௌத்த அறக்கட்டளையின் தலைவர் சுனில் விஜேவர்தன கொஹிலவத்த ஆகியோரால் இந்த உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டியிலுள்ள வெகுஜன ஊடக அமைச்சின் ‘அசிதிசி மெதுர’ வளாகத்தில் இந்த உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நன்கொடையாகக் கிடைத்த இரண்டு லெபரோஸ்கோபி உபகரணங்களையும் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் மகா சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, கடவத்த சரண பௌத்த அறக்கட்டளையின் தலைவர் சுனில் விஜேவர்தன கொஹிலவத்த, அதன் செயலாளர் தயாபால ஹேவகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த நன்கொடை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!